லண்டனில் 15 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர் ஒருவரால் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள Shereka Fab-Ann Marsh என்ற சிறுமி தனது 15வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த அவரது 15 வயது நண்பர் ஒருவர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும், அது வெடிக்கும்போது எப்படி இருக்கும் என அவருக்கு காண்பிப்பதாகவும் கூறி அவரை வெளியே அழைத்து சென்றார்.
இருவரும் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டே போஸ் கொடுத்து தங்களுக்கு தாங்களே செல்பி புகைப்படம் எடுத்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியெறி Shereka Fab-Ann Marsh அவர்களுடைய கழுத்தில் பட்டதால், அந்த சிறுமி சிறிது நேரத்தில் மரணமடைந்தார்.
காவல்துறையினர் விரைந்து வந்து சிறுவனை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
















