ஆப்பிள் ஐபோனுக்காக காதலியை மணிக்கணக்கில் வாடகைக்கு விட்ட சீன மாணவன்.

china-student-offers-to-rent-his-girlfriend-for-iphoneசமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 6, பலரை மனநோயாளியாக மாற்றிவிட்டதே. சாதாரண செல்போனையே விடிய விடிய உபயோகித்துக்கொண்டிருக்கும் நமது இளைஞர்கள் ஆப்பிள் ஐபோன் கிடைத்தால் சும்மா இருப்பார்களா? அதுமட்டுமின்றி ஆப்பிளுக்காக அவர்கள் எதையும் இழக்க தயாராகிவிட்டனர் என்பது அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன. இதற்கெல்லாம் உச்சகட்டமாக சீனாவில் உள்ள ஒரு இளைஞர் ஆப்பிள் ஐபோனுக்காக தனது காதலியை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் கொடுத்திருக்கின்றார்.”

சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மாணவன், பல்கலைக்கழக வாசலில் நின்று கொண்டு ஒரு விளம்பர பலகையை கையில் பிடித்துக்கொண்டிருந்தார். அந்த விளம்பரத்தை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தான் ஆப்பிள் ஐபோன் வாங்க பணம் சேர்க்கும் பொருட்டு தனது காதலியை மணிக்கணக்கிலும், நாள்கணக்கிலும் ஏன் மாதக்கணக்கிலும் வாடகைக்கு விட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். வாடகை விபரம் ஒரு மணி நேரத்துக்கு 10RMB என்றும், ஒரு நாளுக்கு 50RMB என்றும், ஒரு மாதத்திற்கு 500RMB என்றும் விலை நிர்ணயம் செய்துள்ளார்.

மேலும் தனது காதலி குறித்து சிறு விபரங்களையும் அந்த விளம்பரத்தில் அவர் தெரிவித்துள்ளார்,. தனது காதலி 45கி எடை உடையவர் என்றும் 170செமீ உயரம் உடையவர் என்றும், மற்றும் சில விபரங்களையும் அவர் அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளார். யாராவது வந்து அவரது காதலியை வாடகைக்கு எடுத்தார்களா? என்பது தெரியவில்லை. இந்த விளம்பரம் பல்கலைக்கழக வளாகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags: , ,

Leave a Reply