வவுனியா மாவட்டத்தில் உள்ள காணிப் பிரச்சனைகள் தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வு காணும் முகமாக நடமாடும் சேவை ஒன்று வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் இவ் நடமாடும் சேவையில் வவுனியா, நெடுங்கேணி, செட்டிகுளம், வவுனியா சிங்களப்பிரிவு ஆகிய பிரதேச செயலகங்களில் காணிப் பிரச்சனை தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து தீர்வு காணும் முகமாக இக் காணிக் கச்சேரி நடைபெறுகிறது.
நல்லிணக்க ஆணைக்டகுழுவின் பரிந்துரைக்கமைவாக காணிஆணையாளர் நாயகம் மற்றும் மாவட்ட அரவச அதிபர், பிரதேச செயலாளர்கள் இணைந்து இவ் நடமாடும் சேவையினை நடத்துகின்றனர்.
இன்று காலை 8.30க்கு மக்களை வருமாறு அழைத்து கடித்தங்கள் அனுப்டபப்பட்டுள்ளதால் காலை முதலே மண்டபத்தின் வாயிலில் கடும் வெய்யிலுக்கு மத்தியிலும் மக்கள் காவல் நிற்கின்றனர். விசாரணைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கேயே மண்டபத்திற்குள் உள்வாங்கப்படுவதால் ஏனையோர் காலையில் இருந்து காவல் நிற்கின்றனர்.
















