சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் ஒரேமாதிரியானவர்கள்: அரசியல் கட்சிகளின் மாநாட்டில் மஹிந்த.

mahinda-rajapaksa4-600ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளது மாநாடு கொழும்பில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றது. ஆசிய வலயத்தின் அரசியல் தன்மைகளைத் தீர்மானிக்கும் இம்மாநாட்டின் தலைவராக இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவுசெய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு விசேட உரையாற்றவுள்ளார். ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாடு கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கத்தில் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆசிய வலயத்திலுள்ள சகல நாடுகளினதும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த மாநாடு வருடந்தோறும் ஆசிய வலய நாடொன்றில் நடைபெற்று வருகின்றது. ஆசிய வலய நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘ஆசிய சமூகத்தினைக் கட்டியெழுப்புதல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் ஒரேமாதிரியானவர்கள்:

மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் எல்லோரும் ஒரு மாதிரியானவர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் 8வது சர்வதேச ஆசியான் அரசியல் கட்சிகளின் அமர்வில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். ஆசிய நாடுகள் தமது இறைமையை பாதுகாக்க ஒன்றுப்படவேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு நாட்டின் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின் அங்குள்ள அரசியல்கட்சிகள் பேதங்களை மறந்து நாட்டுக்காக ஒன்றுப்படவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டார். இந்தநிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் உரையாற்றினார். மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உட்பட்ட பலரும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றனர். இலங்கையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் ஏற்பாடு செய்துள்ள இந்த சர்வதேச மாநாடு 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் 247 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply