இந்திய பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையர் டுபாயில் கைது.

iphone-sexஇந்தியாவை சேர்ந்த முன்னாள் நண்பி ஒருவரிடம் 10ஆயிரம் தினார் நட்டஈட்டை கோரியதுடன் நிர்வாணப்படத்தை நண்பியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்முடனான நட்பு முறித்துக் கொண்டமைக்காகவே குறித்த இலங்கையரால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையரின் தொலைபேசியில் இருந்து தமது புகைப்படங்களை அழித்து விடுமாறு கோரி இந்திய பெண், 2000 தினாரை வழங்கியுள்ளார். எனினும் 10ஆயிரம் தினார் தரவேண்டும் என்று கோரிய குறித்த பயிற்சியாளர் முன்னாள் நண்பியின் நிர்வாணப் படத்தை அவருடைய குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை பயிற்சியாளர் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

Tags: , ,

Leave a Reply