சீனா ஜனாதிபதியின் விஜயத்திற்;கு முன்னதாக இலங்கை துறைமுகத்திற்க்கு அந்த நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும்,போர்க்கப்பல்களும் வந்ததாக குளோபல் தமிழ் செய்திகள் தெரிவித்திருந்தது உறுதியாகியுள்ள அதேவேளை இந்தவிடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளதாகவும் மோடி மகிந்த சந்திப்பின்போது இடம்பெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன-.இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது
ஐ.நா கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது உறுதியாகிவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து புதுடில்லி உறுதி செய்துவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பின்போது அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மோடி கேள்வி எழுப்புவார் என தெரிவித்துள்ள புதுடில்லி வட்டாரங்கள் பதவியேற்பு நிகழ்வின் போது இடம்பெற்ற சந்திப்பின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்தியுள்ளன.
இதைவிட முக்கியமாக இந்தியாவின் புதிய பாதுகாப்பு கரிசனைகள் குறித்து மோடி மகிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டவுள்ளார். சீனாவின் விமான தள பராமரிப்பு நிலையத்தை ஹிங்குராகொடவில் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவது குறித்தே மோடி தனது கவலையை தெரிவிப்பார்.
முன்னர் இந்த நிலையத்தை திருகோணமலையில் ஏற்படுத்துவதற்க்கு திட்டமிடப்பட்ட வேளை கடும் எதிர்ப்பு உருவானது குறிப்பிடத்தக்கது. இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இது குறித்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு உறவை மேலும் விஸ்தரிக்க முயல்கிறது என இந்தியா கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான சீனா ஜனாதிபதியின் விஜயத்திற்க்கு முன்னதாக இலங்கை துறைமுகத்திற்க்கு சீனாவின் நீர்மூழ்கியும்,போர்க்கப்பல்களும் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்திருந்தன, சீனாவால் கட்டப்பட்ட சி.ஐ.சிடி பகுதிpயில்7 திகதி முதல் 13 ம் திகதி வரை இவை நிலைகொண்டிருந்தன
சீனாவின் இரு போர்க்கப்பல்களும் ஒக்டோபர் மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாகவும், பின்னர் நவம்பரிலும் அவை திரும்பிவருமெனவும் இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளன. இதற்கான உத்தியோபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.
















