அரசாங்கம் மீண்டும் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்ப்பாண குடாநாட்டின் சில பகுதிகளது காணிகளை சுவீகரிக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மாதகல் சாந்தன்குளம் கரையோரப் பகுதிகளில் காணிகளை அபகரிப்பதனால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார். நிலங்களை அளவை செய்து அவற்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
















