பிரபல பாப் பாடகி லேடி காகா வேற்றுகிரகவாசியா? திடுக்கிடும் தகவல்

ladygaga-aliens-tom-cruiseபூமியில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றார்களா? மேலும் பூமியில் இருப்பவர்களிடம் வேற்றுகிரகவாசிகளின் தன்மை யாரிடம் அதிகம் உள்ளது என்பது குறித்த ஒரு வித்தியாசமான சர்வே அண்மையில் பிரிட்டனில் எடுக்கப்பட்டது. இந்த சர்வேயின்படி வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றார்கள் என 66சதவிகிதம் பேர் பதிலளித்துள்ளனர். 32 சதவிகித பேர் வேற்றுகிரக வாசிகள் இல்லை, அது வெறும் கற்பனை என்று பதிலளித்துள்ளனர். 2சதவிதம் மக்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வேற்றுகிரகவாசிகளை போல் இருப்பவர்களாக பெரும்பாலும் பிரபல பாப் பாடகி லேடி காகாவைதேர்வு செய்துள்ளனர். அவருடைய முக அமைப்பு மற்றும் உடலமைப்பு ஆகியவை அவர் வேற்றுகிரகவாசியை போல தோற்றமளிக்க உதவுகிறது என பலர் கூறியுள்ளனர்.

அதேபோல் ஹாலிவுட் முன்னணி நடிகர் டாம் குரூஸ், பிரபல பாப் பாடகி மிலே சைரஸ் ஆகியோர்களும் வேற்றுகிரகவாசிகளை போல இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், ஜஸ்டின் பைபர், சிமோன் கோவல் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்து இருந்தனர்.

Tags: , ,

Leave a Reply