பாடசாலை மாணவனுடன் உடலுறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்படும் போது ஆசிரியை கர்ப்பிணியாக இருந்தார். இந்த கர்ப்பத்திற்கு காரணம் அவரது கணவனா பாடசாலை மாணவனா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலுள்ள லெனாப்ஸ் இடைநிலைப்பாடசாலையில் பாண்ட் வாத்திய இசை சொகற்பிக்கும் ஆசிரியையாக பிரிட்ஜெட் (31) கடமையாற்றி வந்தார். இவர் தன்னிடம் படிக்கும் 14 வயது மாணவனுடன் இரண்டாண்டுகளுக்கு முன்பு உடலுறவு செய்துள்ளார். ஒருமுறை காரிலும், மற்றொரு முறை பாடசாலையின் களஞ்சிய அறையிலும் மற்றொரு முறை தனக்கு பாடசாலையில் ஒதுக்கப்பட்டிருந்த அறையிலும் வைத்து மாணவனுடன் உடலுறவு வைத்துள்ளார் இந்த ஆசிரியை. 14 வயது மாணவனுடன் மூன்று முறை ஆசிரியை உடலுறவு கொண்ட தகவல் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாடசாலையிலிருந்து ஆசிரியை அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்ஜெட் திருமணமாகி கணவனுடன் வசித்து வருகிறார். ஏற்கனவே 4 வயதில் மகன் உள்ள நிலையில் தற்போது பிரிட்ஜெட் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
சிறுவனுடன் உறவு வைத்த புகார் கிடைக்க பெற்றதும் பிரிட்ஜெட்டை போலீசார் கைது செய்து மாவட்ட நீதிபதி ரெஜினா முன்பு ஆஜர்படுத்தினர். பிரிட்ஜெட் கருவுற்றிருப்பதை காரணம் காட்டி அவருக்கு பிணை அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார். இதையடுத்து 5 லட்சம் டொலர் பிணைத் தொகை செலுத்திவிட்டு பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
தனது மகனை தவிர்த்த பிற சிறுவர்கள், பள்ளியில் உடன் வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள் யாருடனும் பிரிட்ஜெட் சந்திக்க கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
















