புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயித் அல் ஹுசேன்-ஜீ.எல்.பீரிஸ் இன்று சந்திப்பு!

UN-hussein-Peiris-meetingபுதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயித் அல் ஹுசேன் – இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவரும் இன்று ஜெனிவாவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத் தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்துள்ளது. இஅ சந்திப்பில் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. ஆணையாளருக்கு உறுதியாகக் கூறவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணமல்போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்த மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவுக்கு அப்பால் விசாரணை நடத்த வெளியார் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் பீரிஸ், சயித் ஹுசேனிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கவுள்ளார் எனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சயித் அல் ஹுசேன் மனித உரிமை விசாரணைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துவதோடு, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசிடம் இருந்து தீர்க்கமான முடிவை எதிர்பார்ப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply