விஜய்யின் மொக்கை டீஸரும், ஷங்கரின் பிரமாண்டமும். கத்தி – ஐ டீஸர்கள் ஒரு ஒப்பீடு.

kaththi-I-teasers-comparisionதமிழ்த்திரையுலக வரலாற்றில் ஒரே வாரத்தில் இரண்டு பிரமாண்ட படங்களின் பாடல் வெளியீட்டு விழாவும், டீஸரும் வெளியாகியுள்ளது. ஒன்று ஷங்கரின் ஐ. மற்றொன்று விஜய்யின் கத்தி.

கடந்த 15ஆம் தேதி அகில உலக சூப்பர் ஸ்டார் அர்னால்ட், நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்ட பிரமாண்டமான நிகழ்ச்சிதான் ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. இந்த படத்தின் டீஸரும் அன்றே வெளியானது. ‘ஐ’ படத்தின் டீஸரை கண்டு திரையுலகமே அதிர்ந்துவிட்டது. ஒரு நிமிட டீஸரில் ஷங்கர் காட்டிய பிரமாண்டத்தையே வாய்பிளந்த பார்த்த திரையுலகம், படம் முழுவதையும் பார்த்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக என்று இனி சொல்லவேண்டியதே இல்லை. இனி மற்ற மொழி படங்கள்தான் ஷங்கர் படங்களுக்கு இணையாக என்று அடைமொழி கூறவேண்டும். ஷங்கரை இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியது உண்மைதான் என ‘ஐ’ டீஸர் நிரூபித்துவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, விஜய் நடித்த ‘கத்தி’ டீஸர் கடந்த 19ஆம் தேதி வெளியானது. கத்தியின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்குமா? என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஏனெனில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நண்பர் என்ற கருத்து பரவியதால் தமிழ் அமைப்புகளின் போர்க்கொடி இந்த சந்தேகத்தை கிளப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் லைகா நிறுவன அதிபரின் பேட்டியும், கத்தி படம் ஆளுங்கட்சி டிவிக்கு கைமாறியதாலும், கத்தியின் பிரச்சனை ஒருவழியாக முடிந்து விழா இனிதே நடைபெற்றது. அன்றே கத்தியின் டீஸரும் வெளியானது. ஆனால் கத்தியின் டீஸரை பார்த்துவிட்டு விஜய்யின் தீவிர ரசிகர்களே ஏமாந்து போனார்கள். துப்பாக்கி டீஸரில், ‘ஐ ஆம் வெயிட்டிங்” என்ற படு அசத்தலான டீஸரை பார்த்த ரசிகர்கள் இந்த மொக்கையான டீஸரை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். டீஸரே இப்படி இருந்தால் படம் எப்படி இருக்கும் என்பதுதான் தற்போது சமூக வலைத்தளங்களின் ஒரே பேச்சு.

ஆக ஐ, கத்தி ஆகிய இரண்டு டீஸரை ஒப்பிடவே முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். என்னதான் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார், மாஸ் நடிகர் என்று சொல்லிக்கொண்டாலும், படம் சரியில்லை என்றால் அவரது ரசிகர்களே அவரை கழுவி ஊற்றுவார்கள் என்பது உறுதி.

Tags: , , ,

Leave a Reply