வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னால் கழிவு வாய்க்கால் மூடி உடைந்து துர்நாற்றம்

vau-str5வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னால் உள்ள கழிவு நீர் கால்வாய் மூடி உடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன் சிறுவர்கள் அக் குழிக்குள் தவறி விழக் கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னால் பஸ்தரிப்பிடம் அமைந்துள்ளது. அப் பகுதியூடாக செல்கின்ற கழிவு வாய்கால் மூடியானது பஸ்தரிப்பிடத்தை அண்மித்து உடைந்துள்ளது. இதனால் கழிவு வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீர், போத்தல்கள், சொப்பின்கள் என்பவற்றால் அவ்விடத்தில் பயணிகள் நிற்கமுடியாதவாறு அவ்வப் போது துர்நாற்றம் வீசவதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் தொற்று நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர, சனிக்கிழமைகளில் குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குழந்தை கிளினிக் நடைபெறுவதால் அங்கு வரும் பெற்றோர் தமது குழந்தைகளுடன் பஸ்சுக்கு காத்திருக்கும் போது அக் குழந்தைகள் தவறி அக் குழிக்குள் விழக்கூடிய அபாயநிலையும் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை குழந்தை ஒன்று தவறி விழப் பர்த்த போதும் அருகில் நின்றவர்கள் உடனடியாக ஓடிச் சென்று குழந்தையைப் பிடித்து விட்டனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அப் பகுதி மக்களும் பயணிகளும் கோரிக்கை விட்டுள்ளனர்.

Tags: ,

Leave a Reply