சாளம்பைக்குளம் கிராமத்திற்கு மின் விநியோகம்

sab-elc5வவுனியா, சாளம்பைக்குளம் மீள்குடியேற்ற கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின் விநியோக நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து 23 வருடங்களுக்கு பின் மீள்குடியேற்றப்பட்ட சாளம்பைக்குளம் கிராமத்தில் 250 வரையிலான குடும்பங்கள் குடியேறியுள்ளனர். இவர்களுக்கான வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழான மின் விநியோகத்தினை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான றிசாட்பதியுதீன், சவுதி நாட்டு பிரதிநிதி ஆகியோர் இணைந்து இன்று (22) வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் இணைப்பாளர் ஐ.எஸ்.எம்.முகைதீன், வடக்கின் வசந்தம் மின் விநியோக மாவட்ட பொறுப்பதிகாரி திருமதி மைதிலி தயாபரன், வர்த்தக கைத்தொழில் அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் அப்துல்பாரி, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கிராம அலுவலர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: ,

Leave a Reply