மாங்குளம் அஞ்சல் அலுவலக கட்டடம் திறந்து வைப்பு

mankulam-postமாங்குளம், அஞ்சல் அலுவலக புதிய கட்டடம் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக முன்னர் இயங்கி வந்த அஞ்சலகம் அழிவடைந்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இப் புதிய அஞ்சலக கட்டிடம் அமைக்கப்பட்டது.

இதனை அஞ்சல் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்கவின் அழைப்பின் பேரில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியுதீன் அவர்கள் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் சவுதி நாட்டு பிரதிநிதிகள், ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர், வடமாகாண ஆளுனரின் இணைப்பாளர் ஐ.எஸ்.எம்.முகைதீன், மாங்குளம் பிரதேச இராணுவ பொறுப்பதிகாரி, வடமாகாண அஞ்சல் திணைக்கள பணிப்பாளர், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாங்குளம் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: ,

Leave a Reply