குழந்தை இல்லாத பெற்றோர்கள் அதிக பணம் செலவழித்தாவது ஒரு குழந்தையை தத்து எடுப்பார்கள் என்று எத்தனையோ செய்திகளை நாம் படித்துள்ளோம். ஆனால் சீனாவை சேர்ந்த ஒரு இளைஞர் தாய் ஒருவரை தத்து எடுப்பதற்காக US$160,000 செலவு செய்ய தயாராக இருப்பதாக வெளிவந்துள்ள செய்து உண்மையில் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் Kuan-Yin Tsui, என்ற 30 வயது இளைஞர் சிறுவயதில் இருந்தே அனாதை இல்லத்தில் வளர்ந்ததால், தனக்கு தாய்ப்பாசம் என்பதே என்னவென்று தெரியாமல் வளர்ந்துவிட்டதாகவும், தற்போது தான் கல்வி பயின்றி நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் பெற்று வசதியாக இருப்பதாகவும், தற்போது தனக்கு தாய்ப்பாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சீனாவில் உள்ள Fanghu Park என்ற பூங்காவில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் US$160,000 பணத்தை கொடி வைத்து, தனக்கு தாயாக வர விரும்புபவர்களுக்கு இந்த பணம் முழுவதும் சொந்தம் என்றும் விளம்பர பலகை ஒன்றை எழுதி அதன் அருகிலேயே உட்கார்ந்திருந்தார்.
தனக்கு தாயாக வரவுள்ளவர் 57 வயது ஒட்டி இருக்க வேண்டும் என்றும், இதுவரை எவ்வித போதை பொருட்கள் பழக்கமும், இருக்கக்கூடாது என்றும், எந்தவித குற்றங்களிலும் ஈடுபடாதவராக இருக்கவேண்டும் என்று அவர் நிபந்தனைகள் விதித்துள்ளார். அங்கிருந்த பலர் தாய் அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது என்றும், திருமணம் செய்துகொண்டு மனைவியின் பெற்றோரை தாய் தந்தை போன்று நினைத்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறினர். ஆனால் அந்த அறிவுரையை கேட்க மறுத்த இவர் தாய் கிடைத்தவுடன் தான் தனக்கு திருமணம் என்று பிடிவாதமாக உள்ளார். இவருடைய ஆசை நிறைவேறுமா? என்பதை சீன மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
















