அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர்-புதுக்குடியிருப்பு ஆர்ப்பாட்டம்

puthukudiyiruppu_protast_005தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை இராணுவம் தமது தேவைக்காக அபகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் காலையில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பமான எதிர்ப்பு போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது.

இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், இழப்பீடுகள் வேண்டாம் காணமல் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல், அரச அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர்,

ஆக்கிரமிப்பை நிறுத்து இராணுவமே வெளியேறு,காணமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்,சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, சட்டவிரோத மீன்பிடிக்காரர்களை வெளியேற்று, எமது விவசாய நிலங்களை ஆக்கிரமிக்காதே, காணாமல் போவதற்கு தமிழர் என்ன விலங்குகளா?, போன்ற கோசங்கள் மற்றும் பதாதைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.போராட்டத்தின் இறுதியில் பிரதேசபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply