நரேந்திர மோடியின் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கும் மகிந்தர்: ரகசியங்கள் வெளியானது !

mahinda-modiசீனா ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்னதாக இலங்கை துறைமுகத்திற்க்கு, அந்த நாட்டின் அதிநவீன நீர்மூழ்கியும்,போர்க்கப்பல்களும் வந்ததாக வன்னிமீடியா இணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது உறுதியாகியுள்ள அதேவேளை, இந்தவிடயம் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

மேலும் மோடி மகிந்த சந்திப்பின்போது இது தொடர்பான அதிருப்த்தியை மோடி வெளியிட உள்ளார் என்று டெல்லியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிசெய்கின்றன. சீனாவில் அதி நவீன மற்றும் சோனார் கருவியால் கண்டு பிடிக்க முடியாத நீர் மூழ்கி கப்பல் ஒன்று கொழும்பு வந்து சென்றுள்ளது. இந்த விடையம் இந்திய தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பின்னரே தெரிந்துள்ளது. அதுவும் கொழும்பில் இருந்து சென்ற ரகசிய தகவல் ஒன்றினூடாகவே அவர்கள் இதனை அறிந்துள்ளார்களாம். இதேவேளை இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பு குறித்து சில பாதுகாப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. அவை என்னவென்று மகிந்தர் ஏற்கனவே அறிவித்தும் இருந்தார். ஆனால் மேலும் அறிவிக்கப்படாத 2 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மகிந்தரோ இல்லை சீனாவே அது குறித்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் இந்தியா மேலும் குழப்பம் அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் நெருக்கமாக இருக்கவேண்டும் என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளார். இதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற அரசியல் கோமாளிகளும் காரணமாக உள்ளார்கள். இன் நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது, இந்திய அதிகாரிகளை பெரும் அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது. நரேந்திர மோடி மகிந்தரை நியூயோர்கில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்போது நரேந்திர மோடி கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளார் என்று டெல்லியில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Tags: , ,

Leave a Reply