தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது, என்ற செய்தியை அனைவரும் வாசித்து அறிந்திருப்பீர்கள். கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளது ஆயுதங்கள் ஒரு முறை தமிழகம் வந்தவேளை அதனை இந்தியா மடக்கிப் பிடித்தது. மேலும் சர்வதேச கடல் பரப்பில் வைத்தும் சில தடவை , இந்திய கடல்படையினர் புலிகளின் படகுகளை மடக்கி ஆயுதங்களை கைப்பற்றியுள்ளார்கள்.
இதுபோன்ற ஆயுதங்களையே தாம் தற்போது அழித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை காலமும் அதனை ஏன் அழிக்கவில்லை ? தற்போது மட்டும் ஏன் அதனை அழிக்கவேண்டும் என்ற கேள்விகள் இருக்கிறது அல்லவா ? நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வருமுன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, இலங்கையில் ஒரு புதிய இயக்கம் ஒன்று உருவாகவேண்டும் என்ற “றோ” வின் ஐடியாவுக்கு செவிகொடுத்து வந்துள்ளது. அதாவது புலிகள் யுத்த ரீதியாக வெல்லப்பட்ட பின்னரே இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் பங்கம் தோன்றியுள்ளது. சீனாவின் தலையீடு அதில் முதன்மை ஆகும். எனவே மீண்டும் இலங்கையில் ஒரு சிறிய குழுவைக் கொண்டு , போராட்டங்களை ஆரம்பித்தால் அன் நாட்டில் மீண்டும் குழப்பங்கள் தோன்றும் என்று “றோ” கருதியது. ஆனால் இம் முறை அதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அது நினைத்தது.
காரணம் என்னவென்றால், எமக்கு அனைவருக்குமே தெரியும் ஆரம்ப காலத்தில் இந்தியா தான் எமது போராட்டத்திற்கு உதவியது என்று. ஆனால் விடுதலைப் புலிகள் மட்டுமே போராட்டம் ஆரம்பித்த பின்னர், இந்தியாவின் பிடியில் இருந்து விலகினார்கள். தமது முடிவுகளை தாமே மேற்கொண்டார்கள். இறுதிவரை இந்தியாவல் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இன் நிலை மீண்டும் தோன்றக்கூடாது என்றும், ஆனால் ஆயுதக் குழு ஒன்று உருவாகவேண்டும் அது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று “றோ” அமைப்பு விரும்பியது. இதற்காக அவர்கள் பல புலம்பெயர் தமிழர்களோடு ரகசிய பேச்சுவார்த்தை கூட நடத்தினர்கள். ஆனால் அதனை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இன் நிலையில் தான் நரேந்திர மோடியின் அரசு பதவியேற்றது. இதுவரை காலமும் மேசையில் இருந்த இந்த திட்டம் இறுதியாக குப்பை தொட்டிக்குச் சென்றுள்ளது.
இதன் காரணமாகவே ஒரு புதிய இயக்கத்தை தொடங்கினால் அவர்களுக்கு கொடுக்கலாம் என்று சேமித்து வைத்திருந்த இந்த ஆயுதங்களை இவர்கள் அழித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மோடி அரசாங்கம் ஈழத் தமிழர்கள் நினைத்த அளவுக்கு அவர்களுக்கு உதவவில்லை என்று பலர் கருதுகிறார்கள். இலங்கை அரசு மீது மென்மையான போக்கை மற்றும் நட்பு ரீதியான போக்கை கடைப்பிடிப்பதன் மூலமே அவர்களை தமது வழிக்கு கொண்டுவர முடியும் என்று மோடி நினைக்கிறார். அவர் நினைப்பது தவறு என்று நினைக்கும்போது, அவரது ஆட்சி முடிவுக்கு அல்லவா வந்திருக்கும். இப்படியே நீண்டு சென்றால் ஈழத் தமிழர்களின் விடிவுக்கு உதவுவது யார் ? என்ற கேள்வி எழுகிறது !
















