யாழ் ரயில் பாதையில் வேட்டி தேங்காயுடன் டக்ளஸ்….!

rainமத்திய அரசின் முகவராக செயற்படும் மத்திய அமைச்சர் டக்ளஸ் ஒரு பலமான செயற்பாடாக சாதனையாக கூறுகிறார்.

இது இலங்கை அரசின் அடுத்த சதி, சீனாவை வடக்கில் கால் ஊன்ற வைப்பதுடன் தமிழர்களை பலிக் கடாவாக்கி, இந்தியாவை எச்சரிப்பது அதுதான் இதை பெரிய சாதனையாக வேட்டியுடன் வெட்டிப் பிளக்குகும் டக்ளஸ் பட்டாளம் இதற்கு தமிழர்கள் பதில் எப்படி?? 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகப்பூர்வ வெள்ளோட்டம் 22-09-2014 காலை 11 மணிக்கு பளை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை சென்றடைந்தது.

பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வட மாகாண ஆளுநாத் ஜி.ஏ. சந்திரசிறி,பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமக்றக் குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸமதிரி அலென்ரின் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, புகையிரத திணைக்கள உயரதிகாரிகள், இந்திய ஜகோன் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தில் உத்தியோகபூர்வ வெள்ளோட்டத்தில் கலந்துகொண்டனர்.

வடக்குகான புகையிரத சேவை பணிகள் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரைக்கும் ஒரு கட்டமாகவும், கிளிநொச்சியிலிருந்து பளை வரை மற்றொரு கட்டமாகவும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் ஒரு கட்டமாகவும் நடைப்பெற்றது இதில் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான பணிகளே தற்போது முடிவுற்று எதிர்வரும் மாத்தில் இருந்து புகையிரத சேவைகள் இடம்றெவுள்ளது.

Tags: , ,

Leave a Reply