காதலித்த பெண்னுக்கு நேர்ந்த கொடுமை: நீதிபதி வழங்கிய தண்டனை

loversமேற்கு வங்காளத்தில் பழங்குடியின பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, கிராமத் தலைவர் உள்பட 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள சுபல்புர் கிராமத்தில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனை அறிந்த பஞ்சாயத்தார் கடந்த ஜனவரி 21ம் திகதி, சுபல்புர் கங்காரு பஞ்சாயத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி காதலித்த குற்றத்துக்காக மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

பின்னர் வழக்கை விசாரித்த கிராமத் தலைவர், அந்த பெண்ணுக்கும், வாலிபருக்கும் தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தபோது, பெண்ணின் குடும்பத்தினர் அபராத தொகையை கட்ட வசதியில்லை என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு அந்த பெண்ணை கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்தியுள்ளனர்.

அந்த பெண் பொலிசில் அளித்த புகாரையடுத்து 13 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

போல்புர் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே குற்றவாளிகளுக்கு தலா ஐந்தாயிரம் அபராதமும், 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply