ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கு மாதக்கட்டணமா? போலி கட்டுரையால் பெரும் பரபரப்பு.

facebook-to-begin-chargingஉலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் தற்போது ஃபேஸ்புக் இணையதளத்திற்கு அடிமையாகி உள்ளனர். சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஃபேஸ்புக் இல்லாமல் பலரால் இருக்க முடியாது. இந்நிலையில் நேஷனல் ரிப்போர்ட் என்ற இணையதளம் இனிமேல் ஃபேஸ்புக் பயன்படுத்தவேண்டும் என்றால் மாதம் ஒன்றுக்கு $2.99 கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் இந்த நடைமுறை நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக உள்ளதாகவும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த முடிவை எடுப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், மிக நீண்ட நேரம் யோசனை செய்ததாகவும், அதன் பின்னர் வளர்ந்து வரும் போட்டிகள் மற்றும் செலவினங்களை சமாளிக்க கட்டணம் வசூலிப்பது அவசியம் என்று முடிவு எடுத்ததாகவும், அந்த கட்டுரை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தகவலை ஃபேஸ்புக் மறுத்துள்ளது. ஃபேஸ்புக் பயனாளிகளிடம் கட்டணம் வசூலிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், இதுபோன்ற போலியான கட்டுரைகளையும், வதந்திகளையும் பயனாளிகள் நம்பவேண்டாம் என்றும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வருங்காலத்தில் ஃபேஸ்புக்கை இன்னும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை இருப்பதுபோன்று ஃபேஸ்புக் அக்கவுண்ட்டும் இருக்கவேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என மார்க் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply