நோயாளியின் நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிட்ட மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்தவர் தீபக் ஜோஷி (51). இவர் தண்டுவடம் பாதிக்கப்பட்டு தானேயில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவர், ஸ்ரீகிருஷ்ணா அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக்கிற்கு நரம்பு ஊசி செலுத்த மருத்துவர் ஸ்ரீகிருஷ்ணா அவரது உடைகளை களைய சொன்னார்.
இதையடுத்து ஊசி செலுத்தப்பட்ட பின்னர் அவரின் நிர்வாண உடலை தனது கமெராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுபற்றி தீபக் மருத்துவரிடம் கேட்டதற்கு தங்களது மருத்துவமனையின் சாதனை பட்டியலில் இடம்பெற செய்வதற்காக புகைப்படம் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது நிர்வாண படம் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தீபக், உடனே இது குறித்து மருத்துவர் மீது கல்வா பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் பொலிசார், வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததால், மனமுடைந்த தீபக் தானே பொலிஸ் கமிஷனர் விஜய் காம்ளேவை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்த புகார் மனுவை பரீசிலனை செய்த பொலிஸ் கமிஷனர் விஜய் காம்ளே உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கல்வா பொலிசிற்கு உத்தரவிட்டதையடுத்து, பொலிசார் மருத்துவர் ஸ்ரீகிருஷ்ணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
















