இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் கதை இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் கடந்த இரண்டு வருடங்களாக தனது கடின உழைப்பில் உருவாக்கியுள்ள ‘ஐ’ படத்தின் முழுக்கதையையும் அதன் தெலுங்கு பதிப்பில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் இண்டர்நெட்டில் வெளியிட்டுள்ளதாக தெலுங்கு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதுமட்டுமின்றி அந்த படத்தின் முழு கதையையும் அந்த பத்திரிகை தனது இணையதளத்தில் பிரசுரித்துள்ளது. இதனால் ‘ஐ’ படக்குழுவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘ஐ’ படத்தின் கதை இதுதான். விக்ரம் கிராமத்தில் வாழும் ஒரு இளைஞர். பிரபல மாடல் அழகி எமி ஜாக்சன் 16 வருடங்களுக்கு பின்னர் விக்ரம் இருக்கும் சொந்த கிராமத்திற்கு வருகிறார். எமியின் அழகை ரசித்த விக்ரமுக்கு தானும் ஒரு புகழ்பெற்ற மாடலாக வேண்டும் என்ற ஆசை வருகிறது.
இதனிடையே எமி ஜாக்சனுக்கு பிரபல சர்வதேச நிறுவனம் ஒன்றில் தூதராக பணிபுரிய வாய்ப்பு தேடி வருகிறது. அந்த நிறுவனம் சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஸ்பான்சர் செய்திருப்பதால் எமி, தூதரக பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார். இதனால் அந்த நிறுவனத்தின் முந்தைய தூதராக இருந்த வில்லன் உபென் எமியின் மீது ஆத்திரம் கொள்கிறார்.
இந்நிலையில் உபெனின் தந்தை ஒரு கெமிக்கல் பேக்ட்ரி வைத்துள்ளார். அதில் தயாரிக்கப்படும் ஒரு வித்தியாசமான மருந்தை உட்கொண்டு தன்னுடைய உடலை மிகவும் கவர்ச்சியாக மாற்ற முடிவு செய்கிறார். ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க மாடல் கனவில் இருக்கும் விக்ரமுக்கு கொடுக்கின்றார். விக்ரமுக்கு சூப்பரான மாடலுக்குரிய உடலமைப்பு வருகிறது. அவருடைய அழகை பார்த்து எமி விக்ரம் மீது காதல் கொள்கிறார்.
இந்நிலையில் வில்லன் கொடுத்த கெமிக்கல் எதிர்விளைவு காரணமாக திடீரென விக்ரம் உடல்நிலை படிப்படியாக ஒல்லியாகிறது. ஒருகட்டத்தில் திடீரென குண்டாகிறது. மிருகம் போன்ற ஒரு அமைப்பாகவும் மாறுகிறது. மீண்டும் தன் பழைய உடலை பெற விக்ரம் நடத்தும் போராட்டம்தான் படத்தின் கிளைமாக்ஸ்.
இதுதான் ஐ படத்தின் கதை என அந்த தெலுங்கு இணையதளம் கூறியுள்ளது.
















