லண்டன் தெருவை சுத்தப்படுத்தும் தொழிலாளிக்கு £4.5 மில்லியன் லாட்டரி பரிசு.

camden-street-cleaner-wins-lotto-jackpotகிழக்கு லண்டன் பகுதியில் உள்ள Camden என்ற இடத்தை சேர்ந்த தெருவை சுத்தப்படுத்தும் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரி குலுக்கலில் £4,570,887 கிடைத்துள்ளது.

Camden பகுதியை சேர்ந்த 42 வயது Joseph Whiting என்பவர் கடந்த புதன்கிழமை நடந்த ஒரு லாட்டரி குலுக்கலில் £4,570,887 பரிசை பெற்றுள்ளார். முதலில் அவருக்கு பரிசு விழுந்துள்ளது என்பதை அவர் நம்பவே இல்லை. வழக்கம்போல தெருவை சுத்தப்படுத்தும் வேலையில் மூழ்கியிருந்தார். பின்னர் அவரிடம் லாட்டரி சீட்டை விற்பனை செய்த கடைக்காரர் நேரடியாக அவரிடம் வந்து உறுதி செய்த பின்னர்தான் அவர் முழுமையாக நம்பினார்.

நான்கு குழந்தைகளுக்கு தந்தையான Joseph Whiting, லாட்டரியில் விழுந்த பணத்தின் மூலம் சொந்தமாக வீடு ஒன்றை லண்டனில் வாங்கப்போவதாகவும்,தனது குழந்தைகளை டிஸ்னிலாந்துக்கு அழைத்து செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மிகப்பெரிய தொகை லாட்டரியில் கிடைத்தாலும், அவர் தெருவை சுத்தபடுத்தும் வேலையை விடவில்லை. வழக்கம்போல அந்த வேலையை அவர் அதிகாலை 4 மணிக்கெலாம் எழுந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவை சுத்தப்படுத்தும் தொழில் ஒன்று அவமான தொழில் இல்லை என்றும், இந்த வேலையை இப்போதைக்கு நான் விடப்போவதில்லை என்றும் Joseph Whiting கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply