அவுஸ்திரேலிய பிரதமர் டொனி எப்போட்டுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மெல்பர்னில் வைத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
குறித்த தீவிரவாதிகள் இருவரும் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகள் சிலரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடையாளம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் செயற்பட்டுவரும் இனவாதக் குழுவினரை அங்கிருந்து அகற்றும் வகையில் அண்மையில் தேடுதல் நடவடிக்;கை சிட்னி மற்றும் பிறிஸ்பர்னில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் சுமார் 800இக்கும் அதிகமான பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவிலும் இனவாதப் பிரிவினரின் அச்சுறுத்தல் நிலவியுள்ளது.
















