போர்க்குற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஐ.நாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்பு!

un-human-rights-council_0இலங்கை தொடர்பாக போர்க் குற்ற விசாரணைகள் இலங்கைக்கு வெளியே நடைபெற்று வருகின்ற அதேவேளை நேற்று ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்ற விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து வாய்மூல அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

மேற்படி வாய்மூல அறிக்கையானது நாளைய அமர்வின்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது என ஐ.நா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அமர்வின்போது கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய முறையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் மீளமைப்பு என்பவற்றில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக ஐ.நா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வாய்மூல அறிக்கையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை காப்பாளர்கள் மீதான அடக்குமுறை, ஊடக சுதந்திரமின்மை உட்பட்ட விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளமை அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.

மற்றும் போர் இடம்பெற்ற காலத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இலங்கை அரசாங்கம் காட்டிய எதிர்ப்புகளும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் எதிர்ப்பார்ப்பதாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அரசாங்கம் தம்மை நாட்டுக்கும் வருமாறு அழைத்துள்ளதாகவும் தாம் இந்த மாத இறுதியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சரை சந்திக்கவுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply