இரட்டை கோபுர தாக்குதல் வழக்கில் தீர்ப்பு. பின்லேடன் மருமகனுக்கு ஆயுள் தண்டனை.

osama-bin-laden-son-in-law-sentenced-to-jailஅமெரிக்காவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்த செப் 11, 2004ஆம் ஆண்டின் இரட்டை கோபுர தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் வெளியானது. இந்த தீர்ப்பின்படி இந்த தாக்குதலுக்கு காரணமான பின்லேடனின் மருமகன் Sulaiman Abu Ghaith என்பவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்துள்ளது. இதனால் அவர் உயிருடன் இருக்கும் வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் 300 வெளிநாட்டவர்கள் உள்பட மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் தொலைக்காட்சியில் பேசிய பின்லேடன் இளையமகளை திருமணம் செய்த Sulaiman Abu Ghaith என்பவர், “உங்களுக்கு(அமெரிக்கர்கள்) எதிராக மிகப்பெரிய படை உருவாகிக் கொண்டிருக்கின்றது. யூதர்கள், கிருஸ்துவர்கள் மற்றும் அமெரிக்கர்களை இந்தப் படை அழிக்க போகின்றது.

இந்தப் புயல் ஓயவே ஓயாது. இந்த விமான தாக்குதல் புயல்களும் ஓயப்போவதில்லை’ என்று அந்த வீடியோவின் மூலம் இவன் எச்சரித்திருந்தான். முஸ்லிம்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் யாரும் இனி விமானங்களில் பயணம் செய்யாதீர்கள். உயர்ந்த மாடி வீடுகளில் குடியிருக்காதீர்கள்’ என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

அமெரிக்க படைகள் பின்லேடனை சுட்டுக்கொன்ற பின்னர் அவருடைய மருமகனை உயிருடன் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. அந்த தீர்ப்பில், ” அமெரிக்கர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காகவும், தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை வழங்கியதற்காகவும் Sulaiman Abu Ghaith அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும், அதுமட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் Judge Lewis Kaplan அவர்கள் தீர்ப்பு அளித்தார்.

Tags: , ,

Leave a Reply