இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தபாய ராஜபக்ச சீன மத்திய இராணுவ திணைக்களத்தின் துணைத்தலைவர் சீயூலியாங் அகியோரிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பானது இன்று கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற தாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் சீன ஜனாதிபதி இலங்கைக்கு வந்திருந்த போது பாதுகாப்பு இலங்கையுடன் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்த செய்திருந்த தகவல்கள் வெளியாகியுள்ள அதே வேளை அதன் தொடர்ச்சியாக சீன மத்திய இராணுவ திணைக்களத்தின் துணைத்தலைவரின் விஜயமானது இலங்கை சீன பாதுகாப்பு, இராணுவ ஒத்துளைப்புக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்வதோடு மிகவும் பலமான இராணுவ உறவை பேணவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் சிறிலங்கா சினா இடையே இராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்திற்கான பயிற்சிகள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருவரும் உரையாடியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















