ஆட்சியாளர்களுக்கு சொந்தமில்லாத பல விடயங்கள் உலகில் உண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் 2014ம் ஆண்டு காலநிலை மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் ஆட்சியாளர்களுக்கு சொந்தமானதல்ல, உலகின் பாதுகாவலர்களே ஆட்சியாளர்கள். உலக சுற்றாடல் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை அவசர நிலைமையாகக் கருதி உலக நாடுகள் செயற்பட வேண்டும்.
காலநிலை தொடர்பான பிரச்சினைகள் ஒர் உலக சவாலாகும். இந்த சவாலை வெற்றிகொள்ள அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமானது. இலங்கையில் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக கடந்த எட்டு ஆண்டுகளில் உயர்வடைந்துள்ளது.
எனினும், தனிநபர் காபனீரொட்சைட் வெளியீடு குறைவாகவே காணப்படுகின்றது. காலநிலை பாதுகாப்பு திட்டங்களுக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
















