ஒரே நாள் இரவில் சீனாவின் நம்பர் ஒன், செல்வந்தராக மாறிய Xiamoi நிறுவன உரிமையாளர்.

xiamoi-smartphone-richest-manசீனாவை சேர்ந்த பிரபல தொழிபதிபர் ஒருவர் ஒரே நாள் இரவில் சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர்தான் சமீபத்தில் வெளியான Xiamoi செல்போன் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiamoi ஸ்மார்ட் போன், Alibaba என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது. மேலும் இதே நிறுவனம் சில தினங்களுக்கு முன் Redmi 1S என்ற ஸ்மார்ட் போனையும் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக ஆனால் அதே சமயத்தில் மிகக்குறைந்த விலைக்கு இந்த ஸ்மார்ட்போன் கிடைத்ததால், பொதுமக்கள் போட்டி போட்டு இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர்.

Alibaba நிறுவனத்தின் உரிமையாளர் 50 வயதான Jack Ma என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை அறிமுகப்படுத்தினார். நியூயார்க் பங்குச்சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்குகளை வர்த்தகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதால் ஒரே நாளில் இவருடைய அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 38% விலை உயர்ந்தது. இதனால் இவருடைய சொத்து மதிப்பு ஒரே நாளில் $25 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டது. தற்போது இவர்தான் சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: , ,

Leave a Reply