51 வயதான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்தச் சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவில் குவாரி வீதியில் இடம் பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பு அதிகாரி தகவல் தருகையில் கல்முனை குவாரி வீதியில் தனியாக வசித்து வந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் இரவில் அத்து மீறி உட்புகுந்த இளைஞன் அந்தப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சோமகுமார, சார்ஜன்ட் முஸ்தபா ஆகியோர் சந்தேக நபரை கைது செய்து கல்முனை நீதிவான் நீதி மன்ற நீதிவான் முன் ஆஜர்டுத்திய போது பதில் நீதிபதி எஸ்.பேரின்பராஜா சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்
















