கோத்தா மீது வாசுதேவ நாணயக்கார பாச்சல்

Gotabaya5அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவும் அரசாங்கத்தை அழிக்கும் விசக்கிருமிகளாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளதால் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு தேர்தலி ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எழுச்சி காரணமாக ஆளுங்கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியுள்ளன.

இந்நிலையில் அரசாங்கத்தின் பின்னடைவுகளுக்கு பொதுபல சேனா மற்றும் அதன் போஷகரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே காரணம் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று நகர்ப்புறங்களில் வாழும் சிறுபான்மை மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் இறங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் ஐ.தே.க. வுக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஜே.வி.பி. யின் மீள் எழுச்சி குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையிலிருந்து மீள வேண்டுமாயின் அரச நிர்வாகம், பொருளாதார கொள்கைகள் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply