வவுனியா மாவட்ட கலை இலக்கிய விழா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரு அமர்வகளாக வவுனியா நகரபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முதல் அமர்வில் இசை, நடனம், கலை கலாசார செற்பொழிவுகள் ன்பன இடம்பெற்றிருந்தன.
தொடர்ந்து பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் வவுனியா மகா வித்தியாலய வீதியிலிருந்து பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடைகள் அணிந்து பவனியாக சென்றனர்.
அத்துடன் மங்கள இசையுடன் காவடி, கோலாட்டம், கண்டிய நடனம் போன்ற நிகழ்வுகளுடன் நடைபயண ஊர்வலம் வவுனியா நகர சபை கலாசார மண்டபம் நோக்கிச் சென்றது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், சமுகஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இதேவேளை, இந் நிகழ்வில் மாவட்ட கலாசார விழா என்பதைத் தாண்டி பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் அதிகமாக நடைபெற்றதாகவும் கொளுத்தும் வெயிலில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் பலர் வெறும் கால்களுடன் செல்ல முடியாது கடைகளுக்குள் ஓடி ஒழித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் சப்பாத்து அணிந்தே காவடி, கோலாட்டம் போன்ற தமிழ் கலாசார நிகழ்வுகளில் ஈடுபட்டனர். தமிழ் மொழியைவிட சிங்கள மொழியே அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நிகழ்வில் குறைந்தளவிலானோர் கலந்து கொண்ட போதும் தமிழ் மொழி பேசுவோரே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















