புதிய பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளும் இணைத்துக் கொள்ளவேண்டும்: வவுனியா தனியார் பேரூந்துகள் சங்கம் கோரிக்கை

vau-bus5வவுனியாவில் புதிதாக அமைக்கப்படும் பஸ் தரிப்பிடத்தில் தனியார், இலங்கை போக்குவரத்துச்சபை பேரூந்துகள் இணைந்தே பணியாற்ற வேண்டும் என வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் சங்கத்தில் கடந்த 15 வருடங்களாக தலைவராக பணியாற்றிய எஸ்.இராஜேஸ்வரன் அவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தின்தினம் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா தனியார் பேரூந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் உரையாற்றுகையில், வவுனியா, கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேரூந்து நிலையமானது வேகமாக கட்டப்பட்டு வருகின்றது. எமது தனியார் பேமூந்துகளுக்கு வவுனியாவில் பஸ்தரிப்பிடம் இல்லை. இதனால் இத் தரிப்பிடம் எமக்காக கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல விடயம் தான். ஆனால் அங்கு நாம் மட்டும் செல்ல முடியாது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளின் தரிப்பிடத்தையும் அங்கேயே மாற்ற வேண்டும். அதன் மூலமே இருவரும் தமது சேவையை சிறப்பாக மேற்கொள்ள முடியும். இல்லாது விடின் பாதிப்பு எமக்கே. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தனியார் பஸ்சங்க நிர்வாக உறுப்பினர்கள், உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் முன்னாள் தலைவர் யுத்தகாலத்திலும் சிறப்பாக 15 வருடமாக தலைமைத்துவம் வழங்கியதற்காக கௌரவித்தனர்.

Tags: ,

Leave a Reply