இலங்கையில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்க திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து சந்திரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் இதுவே அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய சரியான சந்தர்ப்பம் என்றும், தற்போது ஆளும் ஐக்கிய முன்னணி அரசாங்கம் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கின்றது. ஆகவே இதனை மாற்றி அமைக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய சந்திரிக்கா,
எனக்கு பதவிக்கு வரும் எண்ணம் கிடையாது. பதவி ஆசையும் கிடையாது ஆதலால் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதற்கு பூரண ஆதரவை அளிப்பேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிக்கவேண்டும் அதற்கு நாட்டின் மேல் அக்கறை உள்ள அனைவரும் முன்வரவேண்டும் என சந்திரிக்கா மேலும் வலியுறுத்தினார்.
















