அதிபர் வேட்பாளர் யார்? – அறிவிக்கத் தயங்கும் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக, மகிந்த ராஜபக்சவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “கூட்டு எதிரணியின் அதிபர் வேட்பாளரின் பெயரை இப்போது வெளியிட வேண்டியதில்லை. கோத்தாபய ராஜபக்ச ஒரு பிரபலமான வேட்பாளராக இருப்பார் என்று பேசப்பட்டாலும், அதுபற்றி அவர் என்னுடன் கலந்துரையாடவில்லை.

அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னரே, நாங்கள் எமது வேட்பாளரின் பெயரை அறிவிப்போம்.

அந்த தருணத்தில் உள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே, முடிவு எடுக்கப்படும். தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே வேட்பாளரை யாரும் அறிவிப்பதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!