இலங்கையின் நடவடிக்கையால் இந்தியா கவலை

Srilanka_India flagஇலங்கையின் நடவடிக்கை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.

வடக்கின் புகையிரத பாதையை பொறுத்தவரையில் இந்தியா பாரிய பொறுப்புடன் அதனை மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்தியாவின் அந்த செயற்பாடுகளை உள்ளுர் ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை.

கிழக்கில் பாரிய திட்டங்களை இந்தியா செய்கின்ற போதும் சீனாவின் பாத்திரத்துக்கே கவனம் செலுத்தப்படுகிறது . இந்தநிலையில் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளில் பெரும்பாலானவை அன்பளிப்புகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, இலங்கையுடன் 1998ம் மற்றும் 2000ம் ஆண்டுகளில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்டது. 2012ல் தென்னாசியாவில் இலங்கை, இந்தியாவுக்கான பாரிய பங்காளியாக தொடர்ந்தது.

2009ம் ஆண்டு 2.03 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையுடன் இடம்பெற்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply