ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, மகிந்தர் நியூயோர்க் பயணமாகி இருந்தார். கடந்த திங்கள் அன்று அவர் அமெரிக்கா சென்றிருந்தார். இருப்பினும் அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு எதிவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் எவரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை என்றும், மாறாக ஐ.நா அதிகாரிகள் சிலரே அவரை வரவேற்றுச் சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன். ஒரு நாட்டின் அதிபர் மற்றுமொரு நாட்டிற்குச் செல்லும் வேளை குறைந்த பட்சம், அரசாங்க அமைச்சர்களில் ஒருவராவது விமான நிலையம் சென்று வரவேற்பது மரபாக உள்ளது.
ஆனால் இம்முறை அது கூட நடக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிகாரிகளே மகிந்தரை வரவேற்று இலங்கை தூதுவராலயம் கூட்டிச் சென்றுள்ளார்கள். அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலை, மற்றும் ஈராக்கில் அமெரிக்கா நடத்தும் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் மற்றும் அவரது அமைச்சர்கள் அதிகாரிகள் பலரும் பிசியாக இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மகிந்தரை எவரும் வரவேற்க்கச் செல்லவில்லை என்று நொண்டிச் சாட்டும் கூறப்படுகிறது. ஆனால் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவருக்கு பலத்த வரவேற்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அதிபர் ஓபாமா தனது வெள்ளை மாளிகையில் பாரிய விருந்து உபசாரம் ஒன்றையும் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதேவேளை ஹிலாரி கிளின்டனை தாம் சந்திக்கவேண்டும் என்று மகிந்தர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலும் அறிகிறது.
















