இங்கிலாந்தின் வட கிழக்கிலுள்ள Northumberland என்ற நகரத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாணமாக கடலில் இறங்கி குளித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் Northumberland என்ற நகரத்தில் உள்ள Druridge Bay கடல் பகுதியில் இவ்வாறு ஒரே நேரத்தில் சுமார் 1000 பேர் நிர்வாணமாக கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இதற்கு முன்னர் அமெரிக்காவின் புளோரிடோ பகுதியில் 800 பேர் நிர்வாணமாக கடலில் நீராடி சாதனை படைத்திருந்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளை ஒன்றின் நிதிக்காக இந்த குளியல் நிகழ்ச்சி வருடாந்தம் நடத்தப்பட்டு வருகிறது என அந்த அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி Jax Higginsonதெரிவித்துள்ளார். சுமார் 13 செல்சியஸ் குளிர்ந்த நீரில் நிர்வாணமாக குளிப்பது என்பது சாதாரண வியமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், தங்களது நிதியத்துக்காகஇதில் கலந்துகொண்ட அனைவருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















