உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவர், குழந்தையை கொன்ற இளம்பெண்

Sexual-Assaultஉல்லாசத்துக்கு தடையாக இருந்ததால் கணவர், குழந்தையை கொன்றதாக கைதான இளம்பெண், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டிவனம் அருகே தீவனூரை சேர்ந்தவர் சிவா (45), பூ வியாபாரி. இவரது மனைவி அம்சலா இறந்ததையடுத்து, 2009ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த மீனாட்சியை (24) இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

2012ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி ஆசூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிவா இறந்தார். இதையடுத்து மீனாட்சி, குழந்தைகள் தாமரைசெல்வன், பாலசூரியாவுடன் கோலியனூரில் வாடகை வீடு எடுத்து தங்கினார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் குழந்தை பாலசூரியா தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தான். சந்தேக மரணம் என போலீசார் வழக்கை முடித்தனர்.

இந்நிலையில், தாமரைசெல்வனை (4) மீனாட்சி அடித்து சித்ரவதை செய்வதை பார்த்த பொதுமக்கள் வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனாட்சியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

அவர் அளித்துள்ள வாக்குமூலம்: எனக்கும், கணவரின் உறவினர் சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலானது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இது எனது கணவருக்கு தெரிய வந்ததால் கண்டித்தார். இதனால் அவருக்கு பாலில் விஷமும், சட்டினியில் பூச்சிமருந்தும் கலந்து கொடுத்தேன்.

ஆனால் உயிர் தப்பி விட்டார். இதையடுத்து சுரேசுடன் சேர்ந்து திட்டமிட்டு விபத்துபோல வேன் ஏற்றி கணவரை கொலை செய்தேன். பின்னர் கோலியனூருக்கு இடம்பெயர்ந்து சுரேசுடன் வாழ்ந்து வந்தேன்.

அங்கு உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பாலசூரியாவை, சுரேஷ் அடித்து கொன்றான். மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினோம்.

தாமரைசெல்வனை சித்ரவதை செய்த போது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசில் மாட்டிக் கொண்டோம்.இவ்வாறு மீனாட்சி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவா, பாலசூரியா சாவு வழக்குகளை கொலை வழக்காக மாற்றி மீனாட்சி, சுரேஷ், உடந்தையாக இருந்த வேன் டிரைவர் மணிகண்டன் (21), பரசுராமன் (21) ஆகியோரை கைது செய்தனர்.

4 பேரையும் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். குழந்தை தாமரைசெல்வனை திண்டிவனம் ஜி.ஹெச்சில் போலீசார் சேர்த்தனர்

Tags: , , ,

Leave a Reply