கோல்ப் விளையாடும்போது பந்தை ஸ்டாண்ட் ஒன்றில் வைத்து அதை கோல்ப் பேட்டால் அடிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். இந்த கோல்ப பந்து ஸ்டாண்ட் விதவிதமான வடிவங்களில், நிறங்களில் மற்றும் டிசைன்களில் இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான டிசைனுக்கு பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் கோல்ப் பந்தின் ஸ்டாண்ட் ஒரு பெண்ணின் நிர்வாண உடலமைப்பை போன்ற வடிவத்தில் உள்ளது என்பதால்தான் இந்த எதிர்ப்பு.
நிர்வாண பெண்ணின் மேல் கோல்ப் பந்தை வைத்து அடிப்பது அருவருப்பாகவும், அதே நேரத்தில் பெண்ணின் தலையை அடித்து வீழ்த்துவது போன்றும் இருப்பதால் இந்த வகை ஸ்டாண்ட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இங்கிலாந்து நாட்டில் உள்ள Lewes, Sussex என்ற பகுதியை சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்றின் தலைவர் Stephanie Davies-Arai அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நிர்வாண பெண் போன்ற கோல்ப் ஸ்டாண்ட் விற்கும் கடைகள் அனைத்திற்கும் தாங்கள் உடனடியாக அவைகளின் விற்பனையை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும்,தங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத கடைகள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















