இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர் இந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீனவர்கள் இந்தியா ,கிருஷ்ணாம்பட்டினம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகும் இந்திய காவற்துறையினாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















