கல்வி நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமியொருத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுப்பிட்டியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் தரம் எட்டில் கல்வி பயிலும் சிறுமிக்கே இக்கதி நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திலிருந்து குறித்த சிறுமி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியை வலுக் கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் இழுத்து ஏற்றியுள்ளனர். சிறுமி சத்தம் போட முடியாதவாறு வாயையும் பொத்தியுள்ளனர். பின்னர் சிறுமியை அச்சுறுத்தி, வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதிக்கு கொண்டு சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய போது சிறுமி உதவிகோரி கூக்குரலிட்டார். அந்த சமயத்தில் அப்பகுதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சத்தம் கேட்டு அங்கு சென்று சிறுமியை காப்பாற்றியுள்ளதாக தெரியவருகிறது
















