போர்க்குற்ற விசாரணை ஒழுங்கில்லையாம்- ஐ.நாவில் மஹிந்த அதிருப்தி

Mahinda-Rajapaksa1ஐ.நா மனித உரிமை பேரவையினால் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணை ஒழுங்கற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐ.நா மனித உரிமை பேரவையினால் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கை மீது மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணை ஒழுங்கற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. போருக்கு பின்னர் இலங்கை துரதிஸ்டவசமான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. புனரமைப்புஇ புனர்வாழ்வுஇ நல்லிணக்கம், ஆகியவை வேண்டா வெறுப்பாக சில தவறான நிகழ்ச்சி நிரலின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது இது ஒரு தூரதிஷ்வசமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply