கோவிலம்பாக்கம் அண்ணா நகர் 6வது தெரு பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (27), மேஸ்திரி.
இவரது மனைவி அம்சரேகா(26). தம்பதி இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி சத்தியநாராயணன் மர்மமான முறையில் வீட்டில் இறந்தார். இதனையடுத்து அவரது உடலை அடுத்த நாள் (23ம் தேதி) அடக்கம் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில், வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக மடிப்பாக்கம் உதவி கமிஷனர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தியநாராயணன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(35), என்பவருக்கும் அம்சரேகாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த விஷயம் சத்தியநாராயணனுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அம்சரேகா, கள்ளக்காதலன் ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.
















