அஜீத், த்ரிஷா, மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படத்தின் டைட்டில் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதைக்கு டைட்டிலை வெளியெ அறிவிக்க வேண்டாம் என கவுதம் மேனனுக்கு அஜீத் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜீத்தின் தல 55 திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் தயார் நிலையில் உள்ளது. இந்த டைட்டிலை முறைப்படி ரிஜிஸ்டரும் செய்துவிட்டதால், அந்த டைட்டில்தான் படத்தின் டைட்டில் என்று அஜீத்தும், கவுதம் மேனனும் இறுதி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இந்த டைட்டில் பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த முடிவை திடீரென நிறுத்தி வைத்தாராம் அஜீத்.
கடந்த வாரம் முழுவதும் ‘ஐ’ படத்தின் பிரமாண்டமான பாடல் வெளியீட்டு விழாவும், அதன்பின்னர் இரண்டே நாட்கள் இடைவெளியில் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டதால் இந்த நேரத்தில் நமது படத்தின் டைட்டிலை அறிவித்தால், ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காது என்றும், எனவே இந்த பரபரப்பு சற்று அடங்கியவுடன் டைட்டிலை அறிவித்துக்கொள்ளலாம் என்றும் அஜீத் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி படம் குறித்த எந்த தகவல்களையும் இப்போதைக்கு ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் அஜீத், இயக்குனருக்கு கண்டிப்பான உத்தரவை போட்டுள்ளாராம்.
















