யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் அரசியல் தலையீடு; அதிர்ச்சியில் கல்விச் சமூகம்

jaffna-university_2யாழ். பல்கலைக்கழகத்திற்கான மூதவை உறுப்பினர்களாக மீண்டும் அரசியல் சர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் கல்விச் சமூகம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. 27 உறுப்பினர்களை கொண்ட இவ்மூதவையில் சமூக மட்டத்திலிருந்து 14 பேரும் பல்கலைக்கழகத்திலிருந்து 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்திற்கான கவுன்சில் உறுப்பினர்களை இம்முறை அரசியல் கலப்படம் இல்லாமல் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் கல்வி அமைச்சுக்கு யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தன.

ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள மூதவை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் கட்சியின் உறுப்பினர்களாக செயற்படுபவர்கள் அதுமட்டுமின்றி கடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்களும் இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். புதிதாக நியமனம் பெறுபவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளன அந்த வகையில் தேவராஜன் றங்கன், பொன்னையா தியாகராஜா, மார்க்கண்டு இராமதாஸன், முருகுப்பிள்ளை சிறீபதி, இளையதம்பி அன்னலிங்கம், தர்மலிங்கம் இராஜரத்தினம், காசிப்பிள்ளை தெய்வேந்திரன், சுசீலாதேவி சாரங்கபாணி, பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை முத்துக்குமாரு பாலசுப்பிரமணியம், ஷெரின் சேவியர், வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், வேதவல்லி செல்வரெத்தினம், கோடீஸ்வரன் ருஷாங்கன் என தெரியவருகிறது.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கத் தலைவரை உதயன் ஒன்லைன் தொடர்பு கொண்டு கேட்ட போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூதவைஉறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு இதுவரை அறிவிக்கவில்லை ஊடகம் ஒன்றின் மூலமே இதனை அறிந்து கொண்டோம். புதிய மூதவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது என்று கூறுகின்றார்கள் ஆனால் சிறு மாற்றமே இடம்பெற்றுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது பல்கலைக்கழகத்தினை முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகவே நாம் இதைக் கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply