EPDPயின் கிளையாக மாறும் யாழ் பல்கலை – புலிகளின் உறுமலை எதிர்த்தவர்கள் வீணை இசையில் மூழ்கினர்

jaffna-university_2யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கவுன்ஸிலுக்கு அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க மாணவ சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் கோரி வருகின்ற போதும் இம்முறையும் ஈபிடிபியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் அப்பட்டியல் நிரம்பியுள்ளது.

புதிதாக நியமனம் பெறும் 14 பேரின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளன. புதிதாக நியமிக்கப்படுவோர் தேவராஜன் றங்கன், பொன்னையா தியாகராஜா, மார்க்கண்டு இராமதாஸன், முருகுப்பிள்ளை சிறீபதி, இளையதம்பி அன்னலிங்கம், தர்மலிங்கம் இராஜரத்தினம், காசிப்பிள்ளை தெய்வேந்திரன், சுசீலாதேவி சாரங்கபாணி, பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை முத்துக்குமாரு பாலசுப்பிரமணியம், ஷெரின் சேவியர், வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், வேதவல்லி செல்வரெத்தினம், கோடீஸ்வரன் ருஷாங்கன்.

மேற்குறிப்பிட்ட பிரமுகர்கள் பலர் EPDPயின் பட்டியலில் உள்ளுராட்சி – மாகாண சபை – பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களும், கட்சியின் சட்ட – நிர்வாக – ஆசோசகர்களும் – யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் அடங்குவதாக பெயர்குறிப்பிட விரும்பாத யாழ் பல்கலைக்கழக முக்கியஸ்த்தர் ஒருவர் மாலை தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply