அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மிருக வைத்தியத்துறை மாணவர்களான இளைஞர்களும் யுவதிகளும் நிதி சேகரிப்புக்காக மிருகங்கள் சகிதம் நிர்வாணமாக கலண்டர்களுக்கு போஸ் கொடுத்துள்ளனர். ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த மிருக வைத்தியத்துறை மாணவர்கள் தமது பட்டமளிப்பு விழாவையொட்டிய கொண்டாட்ட ங்களுக்காக இவ்வாறு நிதி சேகரிக்கின்றனராம். பண்ணையொன்றின் பல்வேறு இடங்களில் மிருகங்கள் சகிதம் இவர்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர்.
ஆனால், தமது அந்தரங்க பாகங்களை மறைத்தவாறு இவர்கள் காணப்படுகின்றனர். ஏஞ்சலா டேவி, சில்வியா வூட் எனும் இரு மாணவிகளின் சிந்தனையில் தோன்றிய திட்டமாம் இது. இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு நிதி சேகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நான் தெரிவித்தேன். இது நிதி தீவிரமான ஒரு நிதிசேகரிப்புத் திட்டம், இது ஒரு வேடிக்கை அல்ல என்பதை அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்” என ஏஞ்சலா டேவி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் சர்வதேச ரீதியில் இக்கலண்டர்கள் விற்பனைக்கு விடப்படவுள்ளன. இதன் மூலம் 40,000 அவுஸ்திரேலிய டொலர்களை திரட்டலாம் என இக்குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.
















