செவ்வய் கிரகத்தில் ஏலியன்ஸ் பயன்படுத்திய டிராபிக் சிக்னல்? டுவிட்டரில் பெரும் பரபரப்பு.

traffic-signal-in-marsசெவ்வாய் கிரகத்தில் ஏலியன்ஸ்கள் சாலையை கடக்க டிராபிக் சிக்னல் பயன்படுத்துகிறார்களா? இப்படி ஒரு வேடிக்கையான கேள்வி ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரபரப்பாக பரவி வருகிறது.

இந்தியாவின் மங்கள்யான் செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்து புகைப்படங்கள் எடுத்து அனுப்பிக்கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் என்ற சாட்டிலைட் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று ஒரு பொருள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

“டிராபிக் சிக்னல்” தொடர்பான இந்த புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். நாசாவின் கியூரியாசிட்டி விண்கலமானது தற்போது செவ்வாயின் மேற்பரைப்பை ஆராய்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளது.

“விண்கலம் சென்றதை அடுத்து நாசா வெளியிடும் புகைப்படங்களை நான் தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன். நாசாவின் இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். அப்போது விசித்திரமான இந்த புகைப்படத்தை பார்த்தேன்.” என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜோசப் ஒயிட் பேட்டியளித்துள்ளார் இது தொடர்பாக நாசாவின் பதிலுக்காக காத்திருப்பதாகவும், அவர்களிடம் இருந்து பதில் வந்தபின்னர் அடுத்தகட்டமாக அந்த பொருள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அது பாறையாக இருக்கலாம் என்றும் ஒருசிலரால் கூறப்பட்டு வருகிறது.

Tags: , ,

Leave a Reply